Wednesday, May 27, 2026 3:41 pm
இலங்கையிலுள்ள தனியார் மற்றும் சிறு தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் மலையகத் தமிழ்த் தொழிலாளர்கள், சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் (ILO) வரையறுக்கப்பட்ட ‘கட்டாய வேலை வாங்கல்’ என்ற நிலைக்கு நிகரான கடுமையான தொழிலாளர் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த விசேட அறிக்கை வெளியீட்டு விழா இன்றைய தினம் (27/05/2026) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) உத்தியோகபூர்வமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்நாள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மலையக அரசியல் பிரதிநிதிகள் , ஏராளமான சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

