Wednesday, June 10, 2026 11:00 am
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி போரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றுமொரு வழக்கை ஜூலை மாதம் 16 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (10) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பிரதிவாதிகளான யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி போரஸ்ட் ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

