Wednesday, May 27, 2026 7:50 pm
புதுடெல்லிக்கிச் சென்ற தமிழக முதல்வர் விஜய் இன்று பிரதமர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் ,மாநிலத்தின் தேவைகள் குறித்து விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டார். சுமார் 25 நிமிடங்கள் இந்த சந்திப்பு இந்த சந்திப்பு நடந்ததாக இந்தியா டுடே தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளது. மேலும் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
இச்சந்திப்பின் போது, தமிழகத்தின் முக்கியத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, நிலுவையில் உள்ள பல்வேறு மத்திய அரசின் திட்டங்களை விரைவுபடுத்துவது குறித்து முதலமைச்சர் எடுத்துரைத்தார்.
மேததாது அணைக்கட்டு,தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பிரச்சனை, இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

