Monday, June 1, 2026 9:41 pm
துப்பாக்கி வைத்திருக்க அனுமதி வழங்கப்படவர்களுக்கு ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறை தமது ஆயுதங்களைப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற புதிய விதிமுறையை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். இது 2026 ஆம் ஆண்டு உரிமம் புதுப்பித்தல் செயல்முறையின் ஒரு பகுதியாக இருக்கும்.
துப்பாக்கியின் நிலையைச் சரிபார்த்து, அதன் வரிசை எண் உரிமப் பதிவுகளுடன் பொருந்துகிறதா என்பதை பொலிஸார் உறுதி செய்வார்கள்.
தேசியப் பாதுகாப்புச் சபையின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் பரிசோதனைகள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்படும்.

