Monday, June 1, 2026 9:35 pm
பல்கலைக்களகங்களில் உள்ள சுமார் 16,000 மாணவர்களுக்கான வசிப்பிட வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, நாடு தழுவிய அரசப் பல்கலைக்கழகங்களில் 55 புதிய விடுதித் திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளது.
இத்திட்டம் மூன்று கட்டங்களாகச் செயல்படுத்தப்படும். இதில் 13 பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற உயர் கல்வி நிறுவனங்களில் புதிய விடுதிகள் கட்டுவதும் அடங்கும்.
சபரகமுவ பல்கலைக்கழகம் , ராஜரட்ட பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு மிகப்பெரிய ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் தலா ஏழு விடுதித் திட்டங்களைப் பெற்று, 2,200 மாணவர்களுக்குத் தங்குமிட வசதியை வழங்கும். தென்கிழக்குப் பல்கலைக்கழகம் 2,000 மாணவர்களுக்கான ஆறு விடுதிகளைப் பெறும், அதே நேரத்தில் கிழக்குப் பல்கலைக்கழகம் த்தில் 1,600 மாணவர்களும்,வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் ம் 1,800 மாணவர்களும் இந்த சதிகளைப் பெறுவார்கள்.
ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம், வவுனியா பல்கலைக்கழகம் , வயம்பா பல்கலைக்கழகம் ஆகியற்றுக்கு புதிய விடுதிகள் அமைக்கப்படும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், மொரட்டுவ பல்கலைக்கழகம், ருஹுன பல்கலைக்கழகம், கம்பஹா விக்கிரமாராச்சி பல்கலைக்கழகம் ,திருகோணமலை வளாகம் ஆகியவற்றிலும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

