Monday, June 1, 2026 9:46 pm
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் , மக்கும்புரா பல்முனைப் போக்குவரத்து நிலையம் ஆகியவற்றுக்கு இடையேயான சொகுசுப் பஸ் சேவை இன்று (01) மீண்டும் செயல்படத் தொடங்கியது.
விமான நிலையம் , விமானப் போக்குவரத்து சேவைகள் மற்றும் தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவற்றால் கூட்டாக இயக்கப்படும் இந்தச் சேவையானது, விமான நிலையத்திற்குச் சென்று வரும் உள்ளூர் , வெளிநாட்டுப் பயணிகளுக்குப் போக்குவரத்து வசதியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
காலை 5:15 மணி முதல் மாலை 6:30 மணி வரை ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

