Sunday, August 23, 2026 3:13 pm
கொழும்பில் உள்ள எஸ்.எஸ்.சி மைதானத்தில் இலங்கை , இந்தியா ஆகியவற்றுக்கு இடையே நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, இந்திய தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, அவருக்கும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோவிற்கும் இடையே மோதல் வெடித்தது.
ஜெய்ஸ்வால் 45 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது அவரை ஆட்டமிழக்கச் செய்த அசிதா, பெவிலியனுக்குத் திரும்பிச் செல்லத் தொடங்கிய இந்திய ஆட்டக்காரருக்கு ஆவேசமாக ஏதோ கூறினார்.
இலங்கை வேகப்பந்து வீச்சாளருக்கு ஜெய்ஸ்வால் பதிலடி கொடுக்க, நிலைமை சீரடைவதற்கு முன்பு இரு வீரர்களுக்கும் இடையே ஒரு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. சகவீரர்கள் இருவரையும் சமாதானப் படுத்தினார்கள்.

