Saturday, August 8, 2026 7:54 pm
கொழும்பு , குவைத் ஆகியவற்றுக்கிடையேயான துக்கு இடையேயான விமான சேவைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்,மீண்டும் தொடங்கியுள்ளது. ஓகஸ்ட் 8, ஆம் திகதி முதல் வாரத்திற்கு ஆறு சேவைகள் இயக்கப்படும்.
தேசிய விமான நிறுவனத்தின்படி, UL229 விமானம் ஒவ்வொரு திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி , ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.10 மணிக்கு கொழும்பிலிருந்து குவைத்துக்குப் புறப்பட்டு, இரவு 8.05 மணிக்கு குவைத்தைச் சென்றடையும்.
திரும்பும் விமானமான UL230, அதே நாட்களில் இரவு 9.10 மணிக்கு குவைத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5.15 மணிக்கு கொழும்பை வந்தடையும்.
இந்த சேவை மீண்டும் தொடங்கப்பட்டதன் மூலம், புதன்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் விமானங்கள் இயக்கப்படும் வகையில், கொழும்பு மற்றும் குவைத்துக்கு இடையேயான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வழக்கமான பயணிகள் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

