Friday, May 15, 2026 3:59 pm
ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் விஜய்க்கு நெருக்கமானவரக மாறியிருப்பதால் எல்லோரிடமும் பிரபலம் ஆகியிருக்கிறார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு கூட ஜோதிடரீதியாக ஆலோசனைகளை இவர் கூறியிருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே விஜய்க்கு ஜோதிட ரீதியாக பல ஆலோசனைகளையும் அவர் கூறிவருகிறார்.
ஆனால், இவரை விஜய் தனது சிறப்பு அதிகாரியாக நியமித்து அரசு பதவி கொடுத்ததுதான் பெரிய சர்ச்சையாக மாறியது. தவெகவுக்கு ஆதரவு கொடுத்த கூட்டணி கட்சிகள் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தற்போது அவருக்கு ஒதுக்கப்பட்ட பதவி நியமனம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ரிக்கி ராதன் பண்டிட் பல தகவல்களையும் பகிர்ந்து வருகிறார் ‘எல்லோரும் நினைப்பது போல விஜய்க்கு ஜோதிடத்தில் பெரிய நம்பிக்கை எல்லாம் இல்லை. எனக்கும் அவருக்கும் இருப்பது ஒரு அப்பா – மகன் போல,ஒரு நண்பன் போல உறவுதான்.
இன்னும் 30 வருடங்களுக்கு அவரை யாராலும் வீழ்த்த முடியாது. 2017ம் வருடம் ஜெயலலிதா இறந்தபின் நான் விஜய், அஜித் இருவரையும் தொடர்பு கொண்டேன். ஏனெனில், அஜித்துக்கும் முதலமைச்சராகவும் யோகம் இருக்கு.. ஆனால் அதில் விருப்பமில்லை என்று அஜித் சொல்லிவிட்டார்’ என ராதன் பண்டிட் கூறியிருக்கிறார்.

