Sunday, November 22, 2026 10:25 pm
சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விஸா விலக்கு ஒப்பந்தத்தில் இலங்கையும் தாய்லாந்தும்கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே விஸா இல்லாத பயணத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் துணைப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசக் புவாங்கேட்கியோ (Sihasak Phuangketkeow) இலங்கைக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, இன்று ஞாயிற்றுக்கிழமை (22) ஜனாதிபதி செயலகத்தில், வருகை தந்திருந்த தாய்லாந்து அமைச்சருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டார். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான பயணத்தை எளிதாக்குவதுடன், மக்களுக்கிடையிலான உறவை வலுப்படுத்தும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

