Monday, November 23, 2026 7:49 pm
பீபாவின் தலைவர் பதவிக்கு நான்காவது முறையாகப் போட்டியிடும் இன்ஃபான்டினோவுக்கு
தென் அமெரிக்க உதைப்ந்தாட்ட கூட்டமைப்பின் (CONMEBOL) 10 உறுப்பு நாடுகள், தங்கள் ஆதரவை வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தின.
ஜப்பானைச் சேர்ந்த கோசோ தாஷிமா , பிரான்ஸைச் சேர்ந்த பிலிப் டயலோ ஆகியோர் இன்ஃபான்டினோவுக்கு எதிராகப் போட்டியிடுகின்றனர். தேர்தல் மார்ச் 18ம் திகதி நடைபெறவுள்ளது.
2016-ம் ஆண்டு முதல் தலைவராக இருந்து வரும் இன்ஃபான்டினோ, 2031-ம் ஆண்டு வரை நீடிக்கும் வகையில், சர்ச்சைக்குரிய நான்காவது பதவிக்காலத்திற்குப் போட்டியிடுகிறார். தென் அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்ஜென்ரீனா, பொலிவியா, பிறேஸில், சிலி, கொலம்பியா, ஈக்வடோர், பரகுவே, பெரு, உருகுவே,வெனிசுலா ஆகிய நாடுகள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
உலகக் கிண்ண போட்டியில் வணிக உரிமைகளை ஒரு தனியார் முதலீட்டுக் குழுவிற்கு விற்க இன்ஃபான்டினோ மேற்கொண்ட முயற்சி (பின்னர் கைவிடப்பட்டது) பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியபோதும், தென் அமெரிக்க நாடுகள் அவருக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வந்தது.
மூன்று வேட்பாளர்கள் போட்டியிடும் சூழலில், முதல் சுற்றிலேயே வெற்றி பெற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. எந்த வேட்பாளரும் இந்த அளவை எட்டவில்லை என்றால், மிகக் குறைந்த வாக்குகள் பெற்ற வேட்பாளர் நீக்கப்படுவார்; அதன் பிறகு, இரண்டாவது சுற்றில் எளிய பெரும்பான்மை மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்.

