Friday, May 15, 2026 3:51 pm
ஆசிரிய இடமாற்றம் வழங்கப்பட்டமையை கண்டித்து கொட்டும் மழைக்கு மத்தியிலும் இன்று வடக்கு ஆளுநர் அலுவலகம் முன் இலங்கை ஆசிரியர் சங்கத்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆசிரியர் இடமாற்றத்தின் போது ஒருபக்கச்சார்பாக தெரிவு இடம்பெற்றுள்ளது என போராட்டகாரார்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடமாற்றத்தில் பல குறைபாடுகள் இருக்கிறது என வட மாகாண ஆளுநருக்கு எழுத்து மூலம் ஆசிரியர் சங்கம் தெரியப்படுத்தியும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
கொட்டும் மழையில் ஆசிரியர்களின் இந்த போராட்டம் ஆரம்பித்து வைக்கப்படுகின்ற நிலையில் தமது கோரிக்கைகள் உரிய முறையில் பரிசீலிக்கப்படும் வரை தொடர்ச்சியான போராட்டங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் போராட்டகாரார்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

