Sunday, November 22, 2026 10:18 pm
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு உட்பட்டு, ஆறு பொலிஸ் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அரச புலனாய்வு சேவையின் பிரதிப் பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய எச்.கே.ஆர். பெர்னாண்டோ, பொலிஸ் விசேஷப் பிரிவின் பொறுப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் நலப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய டபிள்யூ.யூ. கினிகே, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கும், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்குத் தலைமை வகித்த கே.ஏ.ஜே. கொடிதுவக்கு, பொலிஸ் நலப் பிரிவிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கேகாலை பிரதேச பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஓஷன் ஹெவவிதாரன யாழ்ப்பாணப் பிரிவிற்கும், யாழ்ப்பாணப் பிரதேச பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜி.எச். மாரபான களுத்துறைப் பிரிவிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.களுத்துறைப் பிரிவின் பொறுப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபராக (டி.ஐ.ஜி.) பணியாற்றிய டபிள்யூ.ஜே. பத்மினி, கேகாலை பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த இடமாற்றங்களை பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி.) பிரியந்த வீரசூரிய மேற்கொண்டுள்ளார்.

