Tuesday, May 5, 2026 8:29 pm
பிரபல தயாரிப்பாளரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சவுத்ரி, ராஜஸ்தானின் ஜோத்பூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் மரணமானார். தனது பூர்வீக ஊரான ஜோத்பூருக்குச் சென்ற வழியில் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது.
‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ வாயிலாக ‘நாட்டாமை’, ‘சூரியவம்சம்’ போன்ற பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளார். ஜித்தன் ரமேஷ் ,ஜீவா ஆகியோரின் அப்பாவான ஆர்.பி. சவுத்ரி கார் விபத்தில் உயிரிழந்தது ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது. . தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இவர் படங்களை தயாரித்துள்ளார். ஜித்தன் ரமேஷ் – ஜீவா மட்டுமல்ல: மஜ்பீன் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட ஆர்.பி சவுத்ரிக்கு ஜித்தன் ரமேஷ், ஜீவா மட்டுமின்றி சுரேஷ் , ஜீவன் என மேலும், இரு மகன்களும் உள்ளனர். தந்தையின் தயாரிப்பு நிறுவனத்தையும் மற்ற தொழிகளையும் அவர்கள் பார்த்து வருகின்றனர். ஜீவா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான தலைவர் தம்பி தலைமையில் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சென்னைக்கு கொண்டு வரப்படும் உடல்: ஆர்.பி. சவுத்ரியின் உடலை நாளை சென்னைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

