Tuesday, May 5, 2026 8:44 pm
தமிழக சட்டமன்றத் தேர்தலில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வன்னி அரசு, ரகுபதி போன்ற பிரபலமானவர்கள் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
அந்தியூரில் அதிமுக வேட்பாளர் ஹரிபாஸ்கர் 1,260 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சிவபாலனை இரண்டாம் இடத்திற்குத் தள்ளி, அந்தியூர் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றுள்ளார்.
கம்பம் தொகுதியில் 751 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் ஜெகநாத்மிஷ்ரா வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் திமுக வேட்பாளர் எரமகிருஷ்ணன்.
திண்டுக்கல்லில் 1,131 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் நசீர் ராஜாவை பின்னுக்குத் தள்ளி திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார் வெற்றி.
கள்ளக்குறிச்சியில் திமுகவின் ராஜீவ் காந்தி 798 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் அருள் விக்னேஷிடம் வெற்றியைத் தவறவிட்டுள்ளார்.
அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் கன்னியாகுமரியில் திமுக வேட்பாளர் மகேஷிடம் இருந்து வெற்றியைத் தட்டிச் சென்றுள்ளார்.
கரூர்:
1,821 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் மதியழகனை பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றிருக்கிறார் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
கிள்ளியூர்:
1,311 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ் குமார். இவருக்கு போட்டி கொடுத்தவர் தவெக வேட்பாளர் சபின்.
கோவில்பட்டி:
843 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் வேட்பாளர் கருணாநிதி வெற்றி. இவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் தவெக வேட்பாளர் பாலசுப்பிரமணியன்.
குளித்தலை:
579 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் சுரியனூர் ஏ.சந்திரன் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு டஃப் போட்டி கொடுத்தவர் தவெக வேட்பாளர் பாலசுப்பிரமணி.
கும்பகோணம்:
679 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அன்பழகனைப் பின்னுக்கு தள்ளி தவெக வேட்பாளர் வினோத் வெற்றியைத் தட்டி சென்றுள்ளார்.
மானாமதுரை:
1,208 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் இளங்கோவன் முதல் இடத்தையும், திமுக வேட்பாளர் தமிழரசி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
மணப்பாறை:
1,426 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் கதிரவன் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தை பிடித்து உள்ளவர் அதிமுக வேட்பாளர் விஜயகுமார்.
மன்னார்குடி:
1,566 வாக்குகள் வித்தியாசத்தில் அமமுக வேட்பாளர் காமராஜ் திமுக வேட்பாளர் டி.ஆர்.பி ராஜாவை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றுள்ளார்.
பழனி:
693 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ரவிமனோகரன் தவெக வேட்பாளர் பிரவீன் குமாரிடம் இருந்து வெற்றியைத் தட்டி சென்றுள்ளார்.
பாபநாசம்:
1,065 வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர் ஷாஜகான், தவெக வேட்பாளர் அசாருதீன் உதுமான் அலியை பின்னுக்கு தள்ளி உள்ளார்.
பரமத்தி-வேலூர்:
308 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சேகர் திமுக வேட்பாளர் மூர்த்தியை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
போளூர்:
227 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் அபிஷேக்கிடம் தேமுதிக வேட்பாளர் சரவணன் வெற்றியை நழுவவிட்டுள்ளார்
புதுக்கோட்டை:
1,867 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முத்துராஜா தவெக வேட்பாளர் ஷெரீப்பை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றுள்ளார்.
ஶ்ரீவைகுண்டம்:
1,186 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சரவணன் அதிமுக வேட்பாளர் சண்முகநாதனை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
திருமயம்:
1,492 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ரகுபதி வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு டஃப் போட்டி கொடுத்தவர் தவெக வேட்பாளர் சிந்தாமணி.
திண்டிவனம்:
734 வாக்குகள் வித்தியாசத்தில் விசிக வேட்பாளர் வன்னி அரசு வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளவர் அதிமுக வேட்பாளர் அர்ஜூனன்.
திருக்கோவிலூர்:
285 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் பழனிசாமி தவெக வேட்பாளர் விஜய் ஆர்.பரணிபாலாஜியை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றுள்ளார்.
திருப்பத்தூர்:
1 வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி திமுக வேட்பாளர் பெரிய கருப்பனிடம் இருந்து வெற்றியைத் தட்டி சென்றுள்ளார்.
உதகமண்டலம்:
976 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் போஜராஜன் தவெக வேட்பாளர் இப்ராஹிமை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றுள்ளார்.
மயிலாப்பூரில் மலராத தாமரை – ‘மீண்டும் மீண்டும்’ தோல்வியில் தமிழிசை சௌந்தரராஜன்!
உசிலம்பட்டி:
1,805 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் எம்.விஜய் அதிமுக வேட்பாளர் மகேந்திரனை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
வேப்பனப்பள்ளி:
138 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் ஶ்ரீனிவாசன் அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமியை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றுள்ளார்.
விக்கிரவாண்டி:
910 வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளர் சிவகுமார் தவெக வேட்பாளர் விஜய் வடிவேலை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றுள்ளார்.

