Tuesday, May 5, 2026 8:21 pm
தமிழக சட்டசபை தேர்தலில் 22 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக சார்பில் போட்டியிட்ட லீமா ரோஸ் மார்டின், தவெகவின் சத்யபாமா, பாமக சவுமியா அன்புமணி, பிரேமலதா விஜயகாந்த் உள்பட 22 பெண் எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள் செல்கின்றனர். இதில் விஜய்யின் தவெக சார்பில் மட்டும் 13 பெண் எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்கு செல்கின்றார்கள்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் கட்சி சார்பில் 13 பெண் எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்று அசத்தி உள்ளனர். திமுகவில் ஒரு பெண் எம்.எல்.ஏ கூட வெற்றி பெறவில்லை. அதிமுக சார்பில் 6 பெண் எம்.எல்.ஏக்கள் சட்டசபை செல்ல இருக்கின்றனர். தமிழக சட்டசபைக்கு செல்லும் பெண் வேட்பாளர்கள் யார் யார் என்ற விவரம் பின் வருமாறு
தவெக 1. காயல்விழி – 1,33,611 2. பல்லவி – 69,125 3. தஹீரா – 90,728 4. சித்ரா – 82,858 5. ஜெயலட்சுமி – 81,179 6. தமிழ் செல்வி – 72,391 7. கமலி – 84,058 8. சத்யபாமா – 1,31,401 9. கவிதா சந்தோஷ் – 1,46,466 10. சத்யா – 62,378 11. குமுதா – 72,601 12. ஜெயந்தி – 65,548 13. கீர்த்தனா – 68,709
அதிமுக பெண் எம்.எல்.ஏக்கள் * லீமா ரோஸ் மார்டின் – 60,795 – லால்குடி * மரகதம் குமரவேல் – 69,284 – மதுராந்தகம் (தனி) * சத்தியபாமா – 81,100 – தாராபுரம் * மரகதம் வெற்றிவேல் – 1,01,829 – பாப்பிரெட்டிப்பெட்டி * உஷா ராணி – 87,772 – ஏற்காடு (தனி) * ஜெயசுதா – 76,735 – ஆரணி
பாமக (அன்புமணி ராமதாஸ்) * சவுமியா அன்புமணி – 93,713 – தர்மபுரி
தேமுதிக * பிரேமலதா விஜயகாந்த் – 69,351 – விருத்தாசலம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு * லதா – 56,108 – கீழ்வேளூர்

