Thursday, July 2, 2026 2:28 pm
மறைந்த ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில், சீனாவின் மூத்த பாராளுமன்ற உறுப்பினர் ஹே வெய் தெஹ்ரானில் கலந்துகொள்வார் என்று சீன வெளியுறவு அமைச்சு வியாழக்கிழமை அறிவித்தது.
அவர் சீனாவின் உயர்மட்ட சட்டமியற்றும் அமைப்பான தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் துணைத் தலைவர் ஆவார்.
ஈரானுக்கு எதிரான இஸ்ரேல் , அமெரிக்க ஆகியன இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதல்களின் முதல் நாளான பெப்ரவரி 28 ஆம் திகதி கமேனி வீரமரணம் அடைந்தார். அவரது இறுதிச் சடங்கு ஜூலை 4 ஆம் திகதி தெஹ்ரானில் தொடங்கி, ஜூலை 9 ஆம் திகதி அவரது சொந்த ஊரான வடகிழக்கு புனித நகரமான மஷ்ஹத்தில் நல்லடக்கத்துடன் நிறைவடையும் என்று ஈரானிய அரசு ஊடகங்கள் இந்த மாத தொடக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தன.

