Thursday, July 2, 2026 2:08 pm
அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள் ,உட்பட ஆயிரக்கணக்கானோர் இன்று புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோரின் முன்னிலையில் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.வளர்மதி , எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோருடன் முன்னாள் எம்.எல்.ஏ-க்களான ஸ்ரீவில்லிபுத்தூர் மான்ராஜ், பாபநாசம் ராம்குமார், சாத்தூர் ராஜவ.பர்மன், பரமக்குடி சதன் பிரபாகர், பேராவூரணி ஞானசம்பந்தம், புதுக்கோட்டை பி.கே.வைரமுத்து மற்றும் பெரம்பலூர் தமிழ்ச்செல்வன் ஆகியோரும் தவெகவில் இணைந்தனர்.
இவர்களுடன் ஆயிரக்கணக்கான மாற்றுக்கட்சியினரும் தவெக-வில் ஐக்கியமாகினர். கொங்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு வங்கியாகத் திகழ்ந்த இந்த முக்கியத் தலைவர்களின் ஒட்டுமொத்தத் தாவல், எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு மிகப்பெரிய அரசியல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

