Monday, August 3, 2026 11:33 am
யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் நேற்று அதிகாலை பட்டாசு வெடித்ததில் 32 வயதுடைய செல்வராசா கசிவன் என்பவர் உயிரிழந்துள்ளார்.
மடு மாதா ஆலய யாத்திரைக்காக புறப்படும் வேளையில் பட்டாசுகள் கொளுத்தப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு பட்டாசு வெடிக்காமல் இருந்த நிலையில், அதனை மீண்டும் வெடிக்கச் செய்வதற்காக அருகில் சென்று ஊதிய நிலையிலேயே பட்டாசு திடீரென வெடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் மரண விசாரணை பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

