Tuesday, September 15, 2026 8:32 pm
அமைச்சர் நிர்மல் குமார் தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து உண்மைக்கு புறம்பான , தவறான தகவல்களை தெரிவித்து அவையின் கண்ணியத்தை குறைத்து வருவதாக கூறி திமுக தரப்பில் உரிமை மீறல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சர்க்காரியா கமிஷன் அறிக்கையை தவறாக சித்தரித்து அமைச்சர் பேசியபோதே இதற்கு தகுந்த மறுப்பு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இருப்பினும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மீதும், அவருடைய செயலாளர்களாக இருந்த அண்ணன் வைத்தி , வைத்தியலிங்கம், திரு. A.L.சீனிவாசன், திரு. H.V.ராவ் உள்ளிட்டோர் மீதும் தொடர்ந்து உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை அவர் சுமத்தி வருவதாக அப்புகாரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒருவரே தொடர்ந்து இதுபோன்ற அவதூறான கருத்துகளைத் தெரிவித்து வருவது அரசியல் வட்டாரத்திலும் அவையிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

