Sunday, September 13, 2026 4:08 pm
புதிய மசோதாவின் கீழ், தங்கள் விலங்குகளைப் பதிவு செய்யத் தவறும் நாய் உரிமையாளர்கள், பொருந்தக்கூடிய பதிவுக் கட்டணத்துடன் கூடுதலாக 2,000 ரூபாஅபராதத்தை எதிர்கொள்ள நேரிடும்.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சகத்தால் அரசிதழில் வெளியிடப்பட்ட இந்தச் சட்டம், வெறிநாய்க்கடியை ஒழிப்பதற்கும் நாட்டின் நாய் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்குமான முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஆண்டுதோறும் நாய்களைப் பதிவு செய்யும் முறையை அறிமுகப்படுத்த முயல்கிறது.
இந்த மசோதாவின் கீழ், ஆறு வாரங்களுக்கு மேல் வயதுடைய நாய்களின் உரிமையாளர்கள் அல்லது அவற்றைப் பராமரிப்பில் வைத்திருப்பவர்கள், அவற்றுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி போட வேண்டும் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் ஆண்டுதோறும் பதிவு செய்ய வேண்டும்.
ஒரு நாய்க்குத் தடுப்பூசி போடப்பட்டு, அதற்கான கட்டணம் செலுத்தப்பட்ட பின்னரே அது பதிவு செய்யப்படும், அதைத் தொடர்ந்து பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும், உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் அதிகார வரம்பிற்குள் உள்ள நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த மசோதா வலியுறுத்துகிறது.
கூடுதலாக, வணிக ரீதியான நாய் இனப்பெருக்க மையங்கள் உரிமம் பெற வேண்டும், அதே நேரத்தில் உரிமம் இல்லாதவர்களால் நாய்க்குட்டிகள் விற்பனை செய்யப்படுவது தடைசெய்யப்படவும் முன்மொழியப்பட்டுள்ளது.

