Sunday, August 16, 2026 4:33 pm
அவுஸ்திரேலியாவில் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் வெற்றியைப் பதிவு செய்தது பங்களாதேஷ்
பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் 138 ஓவர்களில் 426 ஓட்டங்கள் எடுத்தது.
தன்ஸித் ஹசன் 101, கப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 84, மெஹிதி ஹசன் மிராஸ் 65 ஓட்டங்கள் அடித்தனர். பங்களாதேஷ் முதல் இன்னிங்ஸில் 228 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.
நான்காம் நாள் ஆட்டத்தை பின்னடைவுடன் எதிர்கொண்ட அவுஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 95.1 ஓவர்களில் 284 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸி வீரர் கிரீன் 104 ஒட்டங்கள் எடுத்தார். பங்களாதேஷ் வீரர் மெஹிதி ஹசன் மிராஸ், இந்த இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
வெற்றி பெற 57 ஓட்டங் கள் என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாஅடியது பங்களாதேஷ் முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய தன்ஸித் ஹசன் ஓட்டம் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் ஷதாம் , மொமினுல் இணைந்து 53 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தங்கள் அணியை வெற்றி பெறச் செய்தனர்.
முதல் இன்னிங்ஸில் 6 , இரண்டாவது இன்னிங்ஸில் 3 என மொத்தம் 9 விக்கெட்டுகளை இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய பங்களாதேஷ் பந்து வீச்சாளர் ஹசன் மஹ்மூத் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
அவுஸ்திரேலிய மண்ணில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி, அதன் முதல் வெற்றியை இந்த ஆட்டம் மூலம் பதிவு செய்து வரலாறு படைத்துள்ளது.
கடந்த 31 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் அணி நீங்கலாக ஆசிய அணி ஒன்றிடம் அவுஸ்திரேலிய அணி அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தது இதுவே முதல் முறை.

