Wednesday, April 15, 2026 2:19 pm
வவுனியா மாநகரசபை மைதானத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது, பொலிஸார் இளைஞர் ஒருவரை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா மாநகரசபை மைதானத்தில் நேற்று இரவு பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் இசை நிகழ்ச்சி ஒன்று இடம்பெற்றது. இதன்போது இசை நிகழ்ச்சியின் நுழைவாயில் பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கும், அங்கு வந்த இளைஞர்களுக்கிடையே திடீரென வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
தர்க்கம் முற்றிய நிலையில் அங்கிருந்த பொலிஸார் இளைஞனைத் தமது கால்களால் தாக்கியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில் பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

