Wednesday, April 15, 2026 1:41 pm
புதுவருட பாரம்பரிய மரபுகளையும் ஆரோக்கிய நலன்களையும் இணைக்கும் வகையில் தலைக்கு எண்ணெய் பூசும் நிகழ்வு பதுளையில் சிறப்பாக நடைபெற்றது.
ஊவா மாகாண கலாசார பிரிவும், மாகாண ஆயுர்வேத திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு பதுளை முதியங்கனை ராஜமஹா விகாரையில் நடைபெற்றது.
முதியங்கன ரஜமஹா விகாரையின் வணக்கத்திற்குரிய முருந்தெனிய தர்மரத்ன தேரரின் வழிகாட்டுதலின்படி இன்று அதிகாலை 6.54 மணியளவில் சுப நேரத்தில் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
பௌத்த கலாசாரத்தில் முக்கியமாக இடம் பெறும் தலைக்கு எண்ணெய் பூசும் சடங்கு உடல் நலத்தையும் மன அமைதியையும் வழங்கும் ஒரு பாரம்பரிய மரபாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

