Wednesday, April 15, 2026 2:34 pm
கடந்த 6 நாட்களில் மாத்திரம் இலங்கை போக்குவரத்துச் சபை ஒரு பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளது என சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த 6 நாட்களில் மாத்திரம் இலங்கை போக்குவரத்துச் சபை ஒரு பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளது. குறிப்பாக ஏப்ரல் 11 ஆம் திகதி மாத்திரம் 20 மில்லியன் ரூபா வருமானம் பதிவாகியுள்ளது.
ஏப்ரல் 11 ஆம் திகதி மாத்திரம் நாடு முழுவதும் 4698 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக மேலதிகமாக 1500 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.

