Monday, April 20, 2026 4:29 pm
நுவரெலியா கிரகரி வாவியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரண்டு படகுகள் மோதியதில் ஒரு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
கவிழ்ந்த படகில் இருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் நீரில் விழுந்து தத்தளித்த நிலையில் நுவரெலியா பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் உயிராபத்து எதுவும் இன்றி பாதுகாப்பாக மீட்டனர்.
குறித்த இரு படகுகளை இயக்கிய சாரதிகள் நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

