Monday, July 27, 2026 10:54 am
வலி .வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆறாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தாம் நீண்ட காலமாக நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வருவதாகவும் தமது வீடுகள், காணிகளை விடுவிக்க கோரி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் , கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

