Monday, April 20, 2026 4:24 pm
பல ஆண்டுகளாக அமைதி வழியை பின்பற்றி வந்த ஜப்பான், தற்போது தனது பாதுகாப்பு கொள்கையில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. சனாயே தகாய்ச்சி தலைமையிலான ஜப்பானிய அரசு, இராணுவ தளவாடங்கள் ஆயுதங்கள் என்பனவற்றை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கான விதிமுறைகளை தளர்த்தியுள்ளது.
ரஷ்யா-உரைன் போர் , மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றங்கள் காரணமாக, உலகளவில் ஆயுதங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு ஆர்டர்கள் தேங்கிக்கிடக்கும் சூழலில், பல நாடுகள் ஜப்பானை ஒரு நம்பகமான மாற்றாக பார்க்கின்றன. குறிப்பாக, பிலிப்பைன்ஸ் முதல் போலந்து வரை பல நாடுகள் ஜப்பானுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களை செய்ய ஆர்வம் காட்டுகின்றன.
ஜப்பானின் இந்த வளர்ச்சி சீனாவுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பிராந்திய அமைதி இதனால் பாதிக்கப்படலாம் என பீஜிங் எச்சரித்துள்ளது. அதேவேளையில், உக்ரைன் நாடு ஜப்பானுடன் ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகளில் ஒத்துழைக்க திட்டமிட்டுள்ளது.
மிட்சுபிஷி எலக்ட்ரிக் மற்றும் தோஷிபா போன்ற ஜப்பானிய நிறுவனங்கள் ஏற்கனவே தங்களது ஏற்றுமதி பிரிவுகளை வலுப்படுத்தி வருகின்றன. அமெரிக்காவை சார்ந்திருப்பதை குறைத்து, ஒரு சுதந்திரமான பாதுகாப்பு விநியோக சங்கிலியை உருவாக்குவதே ஜப்பானின் முக்கிய இலக்காகும்.

