Monday, April 20, 2026 4:44 pm
ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு பதிவானதைத் தொடர்ந்து தற்போது சுனாமி ஏற்பட்டுள்ளது.
இவாத்தே மாகாணத்தில் உள்ள குஜி துறைமுகத்தில் சுமார் 40சென்ரிமீற்றர் உயர சுனாமி அலை பதிவாகியுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கத்துக்குப் பின்னர் 03 மீற்றர் வரை உயரமுள்ள சுனாமி அலைகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இவாத்தே, ஆமோரி மற்றும் ஹொக்கைடோ பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மியாகி மற்றும் ஃபுகுஷிமா கடற்கரைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் இன்று 7.4 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு பதிவானது. இதனைத் தொடர்ந்து கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

