Tuesday, June 16, 2026 3:08 pm
தமிழர்களினுடையதும் தமிழ் மக்களினதும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கமுடியாத ஒருவராக அமைச்சர் சந்திரசேகர் காணப்படுகிறார் என கலாநிதி சிதம்பரமோகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றத்தில் பொய்யுரைத்ததாகக் கூறிய கலாநிதி சிதம்பரநாதன் மோகன், கடற்றொழில் அமைச்சரை உடனடியாக பதவி விலகுமாறு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைப்பதற்காக அனுமதி கோரியபோது கடற்றொழில் அமைச்சர் அதற்கு மறுப்புத் தெரிவித்ததாகச் செய்திகள் வெளியான நிலையில், பாராளுமன்றத்தில் தாம் அவ்வாறு மறுக்கவில்லை என கடற்றொழில் அமைச்சர் தெரிவித்ததாகவும் சிதம்பரநாதன் மோகன் குற்றம்சுமத்தியுள்ளார்.

