Tuesday, June 16, 2026 8:58 pm
கடந்த நான்கு மாதங்களாக அமெரிக்கா – ஈரானுக்கு இடையே நடந்து வந்த போர் கடந்த ஒரு மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் எடுத்த முயற்சியால் அமைதிப் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு தற்போது போர் நிறுத்தப்பட்டிருக்கிறது.
ஆனாலும், ஈரானின் ஹார்மூஸ் நீரிணை அருகே அமெரிக்காவும், ஈரானும் ஒன்றை ஒன்று தாக்கிக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. எனவே போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் இரு நாடுகளும் இறங்கியுள்ளன. இது தொடர்பாக அமெரிக்கா ஒரு அமைதி போர் நிறுத்த ஒப்பந்தத்தை உருவாக்கியிருக்கிறது.
வருகிற வெள்ளிக்கிழமை அமெரிக்காவும் ஈரானும் இதில் கையெழுத்திட்டு விடுவார்கள் என்றும் அப்போது போர் முடிவுக்கு வரும் எனவும், ஹார்மூஸ் நீரிணை முழுவதுமாக திறக்கப்படும் என சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப் ‘போரை முடிவுக்கு கொண்டு வரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் மின்னணு முறையில் ஏற்கனவே கையெழுத்து போட்டுவிட்ட்டன . ஜூன் 19ஆம் திகதிக்குள் ஹார்மூஸ் முழுமையாக திறக்கப்படும்.. ஒப்பந்தம் குறித்து விவரங்கள் அதன் பிறகு வெளியாகும்’ என்று கூறியிருக்கிறார். அதேநேரம் வருகிற வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் ஒப்பந்தம் முறையாக கையெழுத்தாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

