Tuesday, June 16, 2026 4:26 pm
” தேர்தல் பிரசாரத்துக்கு 18 வயதுக்கு குறைவானவர்களை பிரசாரத்திற்காக விஜய் பயன்படுத்தி உள்ளார். வருமான வரி பாக்கியில்லை என்று வேட்புமனுவில் கூறியுள்ள விஜய், வருமான வரி தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கை மறைத்துள்ளார். இதனால் திருச்சி கிழக்கு தொகுதியில் 2ம் இடம் பிடித்த என்னை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும். மேலும் இந்த வழக்கு முடியும் வரை திருச்சி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்க கூடாது என்று உத்தரவிட வேண்டும்” என்று விஜய்யிடம் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் சென்னை பெரம்பூர். திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார் . அவர் திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து பெரம்பர்ூ எம்எல்ஏவாக தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் தான் திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்ற ஆலோசனையை தொடங்கி உள்ளன. திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்யின் வெற்றியை எதிர்த்து அவரிடம் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் 91,381 வாக்குகள் பெற்று விஜய் வெற்றி பெற்றார். விஜய்யை போட்டியிட்ட திமுகவின் முன்னாள் எம் எல் ஏ இனிகோ இருதயராஜ் 63,965 வாக்குகள் பெற்று 27,416 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் 19,715வாக்குவள் பெற்று 3ம் இடம் பிடித்தார்.

