Thursday, May 14, 2026 10:50 am
2009 முள்ளிவாய்க்கால் தமிழின இனப்படுகொலையை நினைவுகூர்ந்து அனுஷ்டிக்கப்படும்
மே 18 – ‘தமிழின அழிப்பு நாள்’ வாரம் ஆரம்பித்துள்ள நிலையில் இன்று யாழ் மாநகரசபையிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ் மாநகரின் முதல்வர் திருமதி மதிவதனி தலைமையில் , நடைபெற்ற குறித்த அஞ்சலியின் போது சபா மண்டபத்தில் வைக்கப்பட்ட பிரத்தியேக நினைவுப் படத்தின் முன்னாக ஈகச் சுடரேற்றி , மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த நினைவுகூறலில் , ஈ.பி.டி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சியின் உறுப்பினர்கள் புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

