Thursday, May 14, 2026 10:00 am
திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினரான ‘கனேமுல்ல சஞ்சீவ’ கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு உதவிபுரிந்ததாக சந்தேகிக்கப்படும் மேலும் ஒருவரை காவல்துறையினர் இன்று (14) கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் , திட்டமிட்ட குற்றச்செயல் குழுக்களுடன் தொடர்புடையவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது அவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிப்பீட்டர் ரக துப்பாக்கி ஒன்று , இரண்டு மெகசின்கள் மற்றும் 10 தோட்டாக்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிற சந்தேகநபர்கள் மற்றும் பின்னணி தொடர்பாக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

