Tuesday, June 23, 2026 3:48 pm
2026 FIFA உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதன்போது அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
உலகக் கிண்ண கால்பந்து தொடரின் குழு ஜே இற்கான லீக் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் ஆஸ்திரியா அணிகள் மோதின. இந்த விறுவிறுப்பான போட்டியின் 39ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி அர்ஜென்டினா அணிக்காக ஒரு கோலை அடித்தார். இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் தனது 17ஆவது கோலைப் பதிவு செய்து உலகக் கிண்ண தொடர்களில் அதிக கோல்களை அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து சாதனையைப் பதித்துள்ளார்.முன்னர் இத்தொடரில் மெஸ்ஸி அடித்த முதல் ஹாட்ரிக் கோல்கள் உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த ஜெர்மனி வீரர் மிரோஸ்லாவ் க்ளோஸின் சாதனையை சமமாக்கியிருந்தன.
தனது 17 ஆவது கோலை பதிவு செய்ததன் மூலம் ஆண்களுக்கான உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்ததுடன், ஜெர்மனி அணியின் முன்கள வீரர் மிரோஸ்லாவ் குளோசேயின் சாதனையையும் முறியடித்துள்ளார். இந்த நடப்பு 2026 உலகக் கிண்ணத் தொடரில் ஆர்ஜென்டினா அணியின் தலைவரான மெஸ்ஸி அடிக்கும் 4ஆவது கோல் இதுவாகும்.
கோல் அடிப்பது மற்றும் சாதனைகளை முறியடிப்பது லியோனல் மெஸ்ஸியின் இயல்பு என்றே கூற வேண்டும். தனது ஆறாவது கால்பந்து உலகக் கிண்ணப் போட்டியிலும் அவர் அதை மீண்டும் நிகழ்த்தியுள்ளார். ஆட்டத்தின் தொடக்கத்தில் நம்பமுடியாத வகையில் பெனால்டி வாய்ப்பு நழுவவிடப்பட்ட நிலையில் அரை மணி நேரத்திற்குப் பின்னர் தியாகோ அல்மாடா வழங்கிய பந்தை மெஸ்ஸி நேரடியாக உதைத்து கோலாக மாற்றி இத்தொடரின் வரலாற்றில் இடம்பிடித்தார்.
நாளை 39 வயதை எட்டப்போகும் மெஸ்ஸி அந்த அணியின் 59% கோல் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். அதேசமயம் இந்தத் தொடரில் அவர் 5 கோல்கள் அடித்திருக்கிறார். இந்த உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலிலும் முதலிடத்துக்கு மீண்டும் முன்னேறியிருக்கிறார்.
இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் இந்த உலகக் கோப்பையில் அர்ஜெண்டினா அடித்திருக்கும் 5 கோல்களுமே மெஸ்ஸி அடித்தது. ஆஸ்திரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 02க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இதன் மூலம் ஜே பிரிவில் இருந்து முதல் அணியாக நாக் அவுட் சுற்றுக்கு அர்ஜெண்டினா அணி முன்னேறியது.
தன்னுடைய முழுமையான ஆட்டத்தின் மூலம் எதிரணிகளுக்கு தொடர்ச்சியாக சவால் கொடுத்துக்கொண்டே இருக்கிறார் லியோனல் மெஸ்ஸி. லியோனல் மெஸ்ஸியின் இந்த வரலாற்று சாதனை மூலம் சர்வதேச கால்பந்து உலகில் தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை அவர் நிரூபித்துள்ளார்.
அதே போன்று ஈராக் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிரான்ஸ் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் பிரான்ஸ் அணி இறுதி 32 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. போட்டி தொடங்கிய 14ஆவது நிமிடத்திலேயே பிரான்ஸ் அணி தனது முதல் கோலை அடித்தது. நீண்ட இடைவெளிக்குப் பின் தொடங்கிய இரண்டாம் பாதியில் 54ஆவது நிமிடத்தில் ஈராக் அணியின் கோல் காப்பாளர் அஹ்மட் பசில் மற்றும் பின்களவீரர் சைத் தஹ்சீன் செய்த மோசமான தவறால் பிரான்ஸ் அணிக்கு எளிதான வாய்ப்பு கிடைத்தது. பசில் பந்தைக் கட்டுப்படுத்தத் தவறியதை சாதகமாக்கிக் கொண்ட உஸ்மான் டெம்பிலி பந்தை எம்பாப்பேயிடம் தட்டிவிட அவர் அதனை எளிதாகக் கோலாக்கினார்.
இப்போட்டியில் பெற்ற கோல்களின் மூலம் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே இரண்டு கோல்களை அடித்து உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜேர்மனியின் மிரோஸ்லாவ் குளோசேயின் 16 கோல்கள் என்ற சாதனையை சமன் செய்துள்ளார். அத்துடன் நடப்பு 2026 உலகக் கிண்ணத் தொடரின் தங்கக் காலணி விருதுக்கான பந்தயத்தில் மெஸ்ஸி 5 கோல்களுடன் முன்னிலையில் இருக்கும் நிலையில் அவருக்கு அடுத்தபடியாக 4 கோல்களுடன் இரண்டாவது இடத்தில் எம்பாப்பே உள்ளார்.
அதேபோன்று நோர்வே மற்றும் செனகல் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 03க்கு 02 என்ற கோல் கணக்கில் நோர்வே அணி வெற்றிப்பெற்றுள்ளது.
இவ்வாறாக 2026 பீபா உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தொடரில் அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி உலக சாதனையை நிலைநாட்டியுள்ள நிலையில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

