Sunday, May 10, 2026 11:06 am
புதிய சரித்திரம் படைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) காலை 10.15 மணியளவில் பதவியேற்றுள்ளார். விஜய்யுடன் 9 பேர் , அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.
இந்நிலையில் பதவியேற்கும் நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு நேரு உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமானது.
இதன்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சி.ஜோசப் விஜய் எனும் நான் …. எனத் தொடங்கி முதலமைச்சராக, தமிழக ஆளுநர் அர்லேகர் முன்னிலையில் பொறுப்பேற்றுள்ளார்.
அதேநேரம் விஜய்யின் பதவியேற்பு நிகழ்வில் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் துறைச்சார்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துக் கொண்டிருந்தனர்.
தமிழக அரசியல் வரலாற்றில் நீண்ட காலமாக நிலவி வந்த திமுக, அதிமுக ஆட்சியினை முறியடித்து புதிய கட்சியாக தமிழக வெற்றிக் கழக அரசாங்கம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

