Thursday, November 26, 2026 6:08 pm
உலகின் பெரும் பணக்காரர்களின் எலன் மஸ்க்கும் ஒருவர். இவரின் SpaceX நிறுவனம் விண்வெளிக்கு சற்றலைற்களை அனுப்பி வருகிறது. மேலும் சற்றலைற் மூலம் உலகில் பல நாடுகளிலும் இந்த நிறுவனம் இணைய சேவையை அளித்து வருகிறது.
அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குழந்தைங்களுக்கும் தலா 2 Space X பங்குகள் வழங்கப்படும் என எலான் மஸ்க் அறிவித்திருக்கிறார். ஒரு பங்கு Space X நிறுவனத்திடமிருந்தும், மற்றொரு பங்கு மஸ்கின் தனிப்பட்ட பங்குகளில் இருந்தும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 7.2 கோடி குழந்தைகளுக்கு Trump Accounts திட்டம் மூலம் 7 லட்சம் கோடி ரூபா மதிப்பிலான பங்குகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.

