Thursday, November 26, 2026 5:04 pm
இலங்கையிலுள்ள இந்தியத் துணை உயர்ஸ்தானிகர் மைத்ரேய குல்கர்னியை நேற்று புதன்கிழமை (25) கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சந்தித்தார்.
இந்தச் சந்திப்பு மிகவும் சுமூகமாக அமைந்ததாகத் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, இருதரப்பு உறவுகள் குறித்தும், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் பலப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடியதாகத் தெரிவித்துள்ளார்.
வரலாற்று, கலாசார, மத ரீதியான பிணைப்புகளை அடிப்படையாகக் கொண்ட இரு நாடுகளுக்கு இடையிலான இந்த நட்புறவு, தற்போது பரஸ்பர நன்மைகளுக்கான விரிவான ஒத்துழைப்பாக வளர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியின் போது இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா வழங்கிய உதவிகளுக்காகவும் மஹிந்த ராஜபக்ஷ தனது நன்றியைத் தெரிவித்தார். இந்த அனர்த்தத்தின் போது இந்தியா வழங்கிய ஆதரவானது, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான நட்புறவையும் சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்துவதாக அவர் வர்ணித்தார்.

