Wednesday, April 15, 2026 12:43 pm
2026 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து சென்னை சுப்பர் கிங்ஸ் அணி விளையாடியது.
போட்டியின் நாணயசுற்சியில் வெற்றிப் பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறையில் 5 விக்கெட்டுக்களை இழந்து 192 ஓட்டங்களை பெற்றது.
சென்னை அணி சார்ப்பில் சஞ்சு சாம்சன் 32 பந்துகளுக்கு 48 ஓட்டங்களையும், ஆயுஸ் மாத்ரே 17 பந்துகளுக்கு 38 ஓட்டங்களையும், டெவால்ட் பிரெவிஸ் 29 பந்துகளுக்கு 41 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
193 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நேற்றைய போட்டியில் வெற்றிப்பெற்றது.
கேப்டன் ரஹானே செய்த சில தவறுகள் தான் கேகேஆர் அணி தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. வருண், நரைன், அனுகுல் ராய் ஆகியோருக்கு தலா ஒரு ஓவர் இருந்தபோதும் 16ஆவது ஓவரை வைபவ் அரோராவுக்கு கொடுத்தனர். அந்த ஓவரில் 20 ரன்கள் கிடைத்தது. இதுதான் ஆட்டத்தில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. அதன்பிறகு வருண், அனுகுல் ராய் ஆகியோருக்கு தலா ஒரு ஓவர் மீதம் இருந்தும் இவர்களை பந்துவீச வைக்கவில்லை. பவர் பிளேவில் மந்தமாக விளையாடியதும் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் நூர் முகம்மது 21 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதினை வென்றார். நடப்பு சீசனில் சென்னை அணிக்கு இது இரண்டாவது வெற்றி. அதுவும் தொடர்ச்சியாக கிடைத்திருக்கிறது. ஐபிஎல் 2024 சீசனுக்கு பிறகு சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
புள்ளிப் பட்டியலில் கடைசி 2 இடங்களில் இருந்த இந்த அணிகள் மோதிய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 8வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. தொடர்ந்து 3 தோல்விகளோடு சீசனைத் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது அடுத்தடுத்து 2 வெற்றிகளைப் பதிவு செய்திருக்கிறது.
பவர்பிளேவில் கேகேஆர் அணிக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. விக்கெட்டுகளை இழந்ததோடு ரன்ரேட்டும் குறைவாகவே இருந்தது. இரண்டாவது ஓவரிலேயே அதிரடி வீரர் ஃபின் ஆலன் விக்கெட்டைக் கைப்பற்றினார் அன்ஷுல் கம்போஜ். ஐந்தாவது ஓவரில் நரைனை வெளியேற்றினார் கலீல் அஹமது. இப்படி சிஎஸ்கே பௌலர்கள் சிறப்பாகப் பந்துவீச பவர்பிளேவில் 2 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்கள் மட்டுமே எடுத்தது நைட் ரைடர்ஸ்.
பவர்பிளேவுக்குப் பின்பாகவும் கொல்கத்தாவால் நன்கு ரன் சேர்க்க முடியவில்லை. சென்னை ஸ்பின்னர்கள் நன்கு பந்துவீசி அவர்களுக்கு சவால் கொடுத்தார்கள். 27 ரன்கள் எடுத்திருந்த ரகுவன்ஷியை 10வது ஓவரில் அவுட்டாக்கினார் அகீல் ஹொசைன். அடுத்த ஓவர் ரஹானே, கிரீன் என அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் நூர் அஹமது. அதனால் 11 ஓவர்கள் முடிவில் 85/5 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது கேகேஆர். அதிக எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய ரிங்கு சிங் மறுபடியும் தாக்கம் ஏற்படுத்தத் தவறினார். 12 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து நூர் அஹமது பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார்.
களத்தில் சிஎஸ்கே வீரர்கள் காட்டிய செயல்பாடு மட்டுமல்லாமல் இந்தப் போட்டிக்காக சூப்பர் கிங்ஸ் அணியின் திட்டமிடலும் வெற்றிக்கு பங்காற்றியது. பந்துவீச்சாளர் மாற்றம், பேட்டர்களுக்கு எதிரான பௌலர்களின் திட்டம், அவர்களுக்கு ஏற்ற ஃபீல்டிங் செட் அப் என அனைத்தும் அட்டகாசமாக இருந்தது. கேகேஆரின் ஒவ்வொரு பேட்டர்களின் திட்டத்துக்கும் ஏற்ற ஒரு மாற்றுத் திட்டத்தை சிஎஸ்கே வைத்திருந்தது.
அகீல் ஹொசைன், நூர் அஹமது இருவரும் இணைந்து 8 ஓவர்களில் 47 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். இந்த சீசனில் இதுவரை பெரிய தாக்கம் ஏற்படுத்தாத நூர் அஹமது இந்தப் போட்டியில் நன்றாகப் பந்துவீசினார். இந்தப் போட்டியில் தான் அவரது லென்த், லைன், வேகம் எல்லாம் சரியாக அமைந்தது.
பேட்டிங், பௌலிங் என சூப்பர் கிங்ஸின் ஒவ்வொரு துறையுமே நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது எனலாம். சஞ்சு சாம்சன், ஆயுஷ் மாத்ரே, டெவால் பிரெவிஸ், கலீல் அஹமது, நூர் அஹமது, அன்ஷுல் கம்போஜ், அகீல் ஹொசைன் என பலவேறு வீரர்கள் இந்த வெற்றியில் பல்வேறு விதத்தில் பங்களிப்பைக் கொடுத்தார்கள்.
நேற்றைய சிஎஸ்கேவின் வெற்றி வெறுமனே ஓரிரு வீரர்களின் வெற்றி அல்ல. ஒரு அணியின் வீரர்களின் கடின முயற்சியின் வெற்றி என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

