Thursday, July 30, 2026 10:17 am
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மையவாடி முதலாம் குறுக்கு வீதி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் கட்டுமானப் பணியின்போது தூண் இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ள நிலையில் உயிரிழந்தவர் மட்டக்களப்பை சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

