Friday, November 27, 2026 12:07 pm
கடந்த பத்தாண்டுகளில் இலங்கையில் பக்கவாத பாதிப்புகள் அதிகரித்துள்ளன என்றும், ஆய்வு செய்யப்பட்ட சமூகங்களில் சுமார் பத்து பேரில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது என்றும் களனி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் உதய ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் தேசிய பக்கவாத சங்கம் (National Stroke Association) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர், நாட்டில் தற்போது சுமார் 10 சிறப்பு பக்கவாத சிகிச்சை பிரிவுகள் மட்டுமே உள்ளன என்றார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு முக்கிய மருத்துவமனையிலும் குறைந்தது ஒரு பக்கவாத சிகிச்சை பிரிவையாவது நிறுவ வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பல மருத்துவமனைகளில் ஆரம்பகட்ட சிகிச்சைக்குத் தேவையான வசதிகளும், பிரத்தியேக மருந்துகளும் இன்னும் இல்லை என்பதையும் , இலங்கையில் ஏற்படும் பக்கவாத பாதிப்புகளில் சுமார் 75 சதவீதமானவை, மூளையில் உள்ள இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பினால் (Ischaemic strokes) ஏற்படுபவை என்றும் பேராசிரியர் ரணவக்க தெரிவித்தார்.

