Friday, November 27, 2026 12:01 pm
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா என்பது தொடர்பான தீர்ப்பை, 2028 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்.
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சல்லே, அந்தத் தடுப்புக் கட்டளையை செல்லாததாக்கக் கோரி இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.இன்று வெள்ளிக்கிழமை (27) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ இந்த ஒத்திவைப்பை அறிவித்தார்.

