Friday, November 27, 2026 12:20 pm
ஈரானுக்கு எதிராக மேலும் இராணுவ நடவடிக்கைகளை எடுக்கும் வாய்ப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்னும் கைவிடவில்லை என்றும் , தான் ஈரானியப் பிரதிநிதிகளைப் பலமுறை சந்தித்ததையும் ஜாரெட் குஷ்னர் உறுதிப்படுத்தினார்.
‘எம்.டி. மீட்ஸ்’ (MD Meets) பாட்காஸ்டில் மத்தியாஸ் டோப்ஃப்னருடன் உரையாடியபோது, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மேலும் தாக்குதல்களை நடத்தக்கூடுமா என்று குஷ்னரிடம் வினவப்பட்டது.
அதற்கு அவர், “ட்ரம்ப் எப்போதும் அனைத்து வாய்ப்புகளையும் மேஜை மீது (பரிசீலனையில்) வைத்திருக்கிறார்” என்று கூறியதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரான் விவகாரத்தில் ட்ரம்ப் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகவும், இந்த நெருக்கடியைக் கையாள்வதற்காக அவர் ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும் குஷ்னர் கூறினார். மேலும், இந்த மோதல் விவகாரத்தில் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸின் கீழ் தான் பணியாற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.
ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவின் அணுகுமுறைக்கு ஐரோப்பிய நாடுகள் போதுமான ஆதரவை வழங்குகின்றனவா என்று கேட்டதற்கு, அவர்களின் செயல்பாட்டை குஷ்னர் விமர்சித்தார்.
“ஐரோப்பியர்கள் அமெரிக்காவிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள்,” என்று கூறிய அவர், இந்தச் சூழலில் ஐரோப்பாவின் எதிர்வினை தமக்கு ஏமாற்றத்தையே அளிப்பதாகத் தெரிவித்தார்.

