Friday, November 27, 2026 11:56 am
2026 சட்டமன்றத் தேர்தலில் சென்னை பெரம்பூர் , திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்ட விஜய் வெற்றி பெற்றார். அதில் பெரம்பூர் தொகுதியை வைத்துக்கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் இராஜினாமா செய்தார்
இந்நிலையில், சொத்து விவரங்களை மறைத்து விஜய் தேர்தலில் போட்டியிட்டுள்ளதால் வெற்றி செல்லாது என அறிவிக்குமாறு சென்னை பெரம்பூர் தொகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், இந்த மனுவை நிராகரிக்குமாறு விஜய் தரப்பில் நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் இன்று வெள்ளிக்கிழமை [26] தீர்ப்பளித்த நீதிபதிகள் முதலமைச்சர் விஜயின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டனர். விஜயின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்கவும் நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

