Tuesday, November 24, 2026 9:44 pm
கல்முனை மாநகர சபை , சாய்ந்தமருது நகர சபை ஆகியவற்றிற்கான தேர்தல்களை நடத்துவதற்கான நடவடிக்கைகள், எல்லை நிர்ணயச் செயல்முறை நிறைவடைந்த பின்னரே அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வேட்புமனுக்களைக் கோருவதற்கு முன்னதாக, தேர்தல் தொகுதிகள் உருவாக்கப்பட்டு அவை வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும் என்று ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த இரண்டு உள்ளூராட்சி மன்றங்களும் 2027ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15-ஆம் திகதி முதல் தமது பணிகளைத் தொடங்கும் என வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

