Sunday, November 8, 2026 4:38 pm
டென்னிஸ் ஜாம்பவானும் நீண்டகால ரியல் மட்ரிட்டின்நீண்டகால ரசிகருமான ரஃபேல் நடாலுக்கு புதன்கிழமை ரியல் மட்ரிட்டின் இயக்குநர்கள் குழுவில் ஓர் இடம் வழங்கப்பட்டது — இதன் மூலம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுப்பயணத்திலிருந்து விலகிய தனது ஓய்வுத் திட்டங்களில், தான் மிகவும் விரும்பும் உதைபந்தாட்ட கிளப்பில் ஒரு பொறுப்பையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
“தலைவர் ஃபுளோரென்டினோ பெரெஸ் ,இயக்குநர்கள் குழுவிற்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்,” என்று நடால் சமூக ஊடகங்களில், சிறுவயதில் முழு மட்ரிட் சீருடையை அணிந்திருந்த தனது புகைப்படத்தின் அருகில்வெளிப்படுத்தினார். நான் இந்த முன்மொழிவை மிகுந்த உற்சாகத்துடனும், கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடனும், என்னால் இயன்ற அனைத்தையும் பங்களிக்கும் மனவிருப்பத்துடனும் ஏற்றுக்கொண்டேன்.
“எங்கள் கிளப்பின் 67,778-வது உறுப்பினரான ரஃபேல் நடால் பரேராவை, இயக்குநர்கள் குழுவின் புதிய உறுப்பினராக நியமிப்பதற்கான ஒப்புதலை, பிரதிநிதிகள் அடங்கிய பொதுச் சபையில் சமர்ப்பிக்க எங்கள் வாரியம் ஒப்புக்கொண்டுள்ளது” என்று 15 முறை ஐரோப்பிய சம்பியன் பட்டம் வென்ற மட்ரிட், கூறியது.
நடாலின் மாமாவான மிகுவல் ஏஞ்சல் நடால், போட்டி கிளப்பான பார்சிலோனாவிற்காக விளையாடிய போதிலும், நடால் மட்ரிட்டை ஆதரிக்கிறார்.


