Sunday, November 8, 2026 12:35 pm
எரிசக்தி உள்கட்டமைப்பு உட்பட பிற வசதிகளைக் குறிவைத்து, சனிக்கிழமை அதிகாலை வரை கீவ் ,அதன் சுற்றுப்புறப் பகுதிகள் மீது ரஷ்யா 36 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி டெலிகிராமில் தெரிவித்தார்.
கீவ் பகுதியில், ரிவ்னே மற்றும் க்மெல்னிட்ஸ்கி அணுமின் நிலையங்களை கீவ் மத்திய உக்ரைனுடன் இணைக்கும் ஒரு துணை மின் நிலையம் ஆகியன தாக்கப்பட்டது. இந்தத் தாக்குதலால் தலைநகரில் உள்ள வடக்கு பாலம், குடியிருப்பு கட்டிடங்கள் , ஒரு மழலையர் பள்ளி ஆகியவையும் சேதமடைந்தன.
கீவ் நகரில் மின்சாரம், தண்ணீர் ,வெப்பமூட்டும் விநியோகம் போன்றவற்றில் கடுமையான தடைகள் ஏற்பட்டுள்ளதாக ஜெலென்ஸ்கி கூறினார். கீவ் பகுதியில் நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், தலைநகரில் 14 வயது குழந்தை உட்பட ஐந்து பேர் காயமடைந்ததாகவிம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

