Friday, July 31, 2026 11:18 am
யாழ். வடமராட்சி நெல்லியடிப் பகுதியில் உள்ள காட்டுப் பகுதி ஒன்நில் 20 லட்சம் ரூபா பெறுமதியான 16 கிலோ கேரள கஞ்சாப் பொதிகள் யாழ்ப்பாண மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அரச புலனாய்வுச் சேவையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இக்கடத்தல் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.
இச் சட்டவிரோதக் கேரள கஞ்சா கொழும்புப் பகுதிக்குக் கைமாற்றப்படவிருந்த நிலையில், அரச புலனாய்வுச் சேவையினரின் விரைவான நடவடிக்கையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

