Tuesday, July 28, 2026 1:07 pm
பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தொடர்பான வழக்கு இன்று (28) செவ்வாய்க்கிழமை பதுளை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணையைக் காணவும், அவருக்கு ஆதரவு தெரிவிக்கவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்கள் கயந்த கருணாதிலக்க, முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர்.
உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவரது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பதுளை உயர்நீதிமன்றம் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை விதித்து இன்றையதினம் தீர்ப்பளித்தது.

