Monday, June 29, 2026 4:42 pm
யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் ஆண்டகை திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் திருத்தந்தை 14ஆம் லியோவால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
1966ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் 2000ஆம் ஆண்டு கொழும்பு மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். உரோமில் இறையியல் பட்டத்தையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலைப் பட்டத்தையும், கொழும்பில் கல்வியியல் டிப்ளோமாவையும், ஐக்கிய இராச்சியத்தில் கல்வியியலில் முதுகலைப் பட்டத்தையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமானி, கலைமானி பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.
2020ஆம் ஆண்டு அப்போதைய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயராக நியமிக்கப்பட்டு 2020 ஆம் ஆண்டு ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டதுடன் 2024ஆம் ஆண்டு மட்டக்களப்பு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகராகவும் நியமனம் பெற்று பணியாற்றிவருகின்றார்.
இதுவரை யாழ் ஆயராக பணியாற்றிய பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஓய்வு பெறுவதனால் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

